பொதுவாக மீடியா உலகில் இருக்கின்ற பிரபலங்களுக்கு எப்பொழுதும் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற பிடிக்கும் அந்தவகையில் சின்னத்திரையில் பயணித்துக்கொண்டிருந்த பெரும்பாலான பிரபலங்கள் முதலில் சின்ன சின்ன வீடியோ என அதன் மூலம் தனது திறமையை வளர்த்து கொண்டு பின் படிப்படியாக தனது திறமையை காட்டி சின்னத்திரை வெள்ளித்திரை என நுழைந்து அசத்துகின்றனர்.
அதிலும் சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை அள்ளுகின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினி தற்போது பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகி உள்ளார்.
அந்த கதாபாத்திரத்தில் தற்போது வினுஷா தேவி என்ற டிக் டாக் பிரபலம் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலின் ஹீரோ பாரதிக்கு தங்கையாக அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா வேறு சீரியலில் மாறியுள்ளதால் இந்த கேரக்டர் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு பிரபலத்தை தேர்வு செய்துள்ளதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது. தற்போது இந்த தொடரில் பாரதி கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஜட்ச் விவாகரத்து தர மறுத்து நீங்கள் இருவரும் ஆறுமாதம் ஒன்றாக இருக்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
அதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்கள். தற்போது இந்தத் தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆம் அவர் ஒரு நாளைக்கு சுமார் இருபதாயிரம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.