கொரோனாவின் தாக்கம் இந்தியா முழுவதும் முன்பை விட பல மடங்கு அதிகரித்து வருவதால் தொடர்ந்து பல கோடி மக்கள் நாள்தோறும் இறந்து வருவதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் காலையில் எழுந்தால் இந்தியர்கள் படும் கஷ்ட்டங்களும் பலர் இறந்து விட்டார்கள் என்ற செய்திகளும் தான் வருகிறது.
அந்த வகையில் கொரோனாவின் இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான திரை பிரபலங்கள் இறந்துள்ளார்கள் நாள்தோறும் இரண்டிற்கும் குறையாமல் துக்க செய்தி வந்துகொண்டே இருக்கிறது எனவே கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இயக்குனரும் நடிகருமான அருண் ராஜா காமராஜின் அவர்களின் மனைவி சிந்து இன்று அதிகாலை கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அருண் ராஜ் மற்றும் இவரின் மனைவி இருவரும் நேற்று தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிந்து இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் இவரின் உடல் தகனம் செய்வதற்காக மின்னல் மையத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜ் தனது மனைவியின் கடைசி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக PPF உடை அணிந்து கொண்டு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என்று அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு மனைவியின் இறுதிச் சடங்கில் கூட இப்படி சத்தம் போட்டுக்கூட அழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அருண்ராஜ்.