மனைவி இறந்து ஒரு வருடம் கூட ஆகல அதற்குள் இரண்டாவது திருமணமா,? அருண் ராஜா காமராஜ்ஜெய்விளாசும் ரசிகர்கள்

arun-raja-kamaraj
arun-raja-kamaraj

நடிகர் அருண் ராஜா காமராஜ் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும்  இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகத் தன்மை கொண்டு விளங்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக பென்சில், கபாலி, ஜிகர்தண்டா, போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் அருண் ராஜா காமராஜ் எழுதிய ஒரு ஆல்பம் சாங் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது அதாவது கண்ணகுழி அழகே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து நடிகர் தயாரிப்பாளராக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், உட்பட பளர் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியால் தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து சீன மொழியிலும் இந்த படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அருண் ராஜா காமராஜ் மனைவி சிந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா அவர்கள் காலமானார். மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த அருண்ராஜ் காமராஜ் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இவர் திருமணம் செய்து கொண்ட நபர் குறித்து எந்த ஒரு தகவலும் இன்று வரைக்கும் வெளியாகாமல் இருந்து வருகிறது.