பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து பாரதி கதாபாத்திரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
சில காலங்களாக இந்த சீரியல் பெரிதாக சுறுசுறுப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதிதாக சில நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் வெண்பாவின் அம்மாவாக ரேகா அறிமுகமானார்.
எப்படியாவது வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விட வண்டும் என்ற முடிவில் சர்மிளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வெண்பா செய்த சதி திட்டத்தால் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இவர்களுக்கு இருக்கும் இந்த பிரிவு விரைவில் நீங்கி இருவரும் ஒன்றிணைந்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் இந்த சீரியலில் இருந்து விலக உளளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சீரியலில் பாரதிக்கு ஜோடியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த வந்த ரோஷினி விலகிய நிலையில் தற்பொழுது பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத்துக்கு பதிலாக திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.