Arun pandiyan: நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தற்பொழுது வரையிலும் சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இவருடைய மகளை காதலித்து கரம் பிடித்த அசோக் செல்வனை விட அதிக சொத்து வைத்துள்ளார் அப்படி தற்பொழுது அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் ஈரோட்டை சேர்ந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் இவருடைய தந்தை தொழில்முறை காரணமாக தனது மூன்று வயதிலேயே குடும்பத்தினர்களுடன் சென்னைக்கு வந்தார். சந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஸ்கூல் முடித்த அசோக் செல்வன் பின்னர் சென்னை லயோலோ கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தார்.
இவ்வாறு கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில குறும்படங்களை இயக்கத் தொடங்கியவர் பிறகு நடித்தும் உள்ளார். தனக்கு நடிப்பு நன்றாக வருவதை தெரிந்துக் கொண்டு அசோக் செல்வன் படிப்பை முடித்தவுடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். இந்த சமயத்தில்தான் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளார்.
இப்படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பிறகு பிசாசு 2, வில்லா போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து தெகிடி திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது தற்போது தென்னிந்திய திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சாதித்துள்ளார்.
அந்த வகையில் ஓ மை கடவுளே, போர் தொழில் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியினை பெற்றது. மேலும் பா ரஞ்சித் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார், சபாநாயகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகையும், பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் காதலிக்க துவங்கினார்.
இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்க சமீபத்தில் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவலின்படி, அசோக் செல்வனின் சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி பாண்டியன் தந்தையும், அசோக் செல்வனின் மாமனாருமான அருண்பாண்டியன் பல மடங்கு வசதி படைத்தவராம்.
இவரின் சொத்து மதிப்பு 120 கோடி முதல் 140 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை ஆனால் அசோக் செல்வனை விட அருண் பாண்டியன் அதிக வசதி படைத்தவர் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.