தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்தவர் அருண்ராஜா காமராஜ். நடிகராக இவர் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து இவர் மான் கராத்தே, நட்புன்னா என்னன்னு தெரியுமா, க. பெ. ரணசிங்கம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் காமெடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது இது போதாத குறைக்கு இவர் கானா என்ற திரைப்படத்தை இயக்குனராக அறிமுகமானார்.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் வெற்றி அடைந்த ஆர்டிகள் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது தலைப்பு என் நெஞ்சுக்கு நீதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது சினிமாவுலகில் இவர் தொட்ட எல்லாத்தையும் வெற்றிக் கண்டுள்ளார் இப்படி சினிமாவை நேசித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் கொரோனா தொற்று இவருக்கும் ஏற்பட்டது.
அவரைத் தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்டது அவரது காதல் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் கூட அருண் ராஜாவிற்கு ஆறுதலாக சில நடிகர்கள் நின்றனர் அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கூட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மனைவியைப் பிரிந்து தற்பொழுது வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் இன்று அவர்களது திருமணநாள் முன்னிட்டு அருண் காமராஜ் தனது இறந்த மனைவிக்கு திருமண வாழ்த்துக்கள் சொல்லி மனைவியுடன் இருக்கும் திருமணம் மற்றும் பழைய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அருண் காமராஜ். இதோ நீங்களே பாருங்கள்.
திருமணநாள் வாழ்த்துகள் பாப்பி 😭❤️ pic.twitter.com/kUidCN8clo
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) December 6, 2021