அருள்நிதி நடிப்பில் உருவாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட போஸ்டர்..

arul-nithi-1
arul-nithi-1

தொடர்ந்து வித்தியாசமான கதைய அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் அருள்நிதி இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தினை ஒலிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், ராட்சசி படப் புகழ் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அருள்நிதி தொடர்ந்து கதை தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதினை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு சில படங்கள் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் கூட பாக்ஸ் ஆபீஸில் வெற்றியினை கண்டு வருகிறது.

இந்நிலையில் கடைசியாக கவின், அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்த டாட்டா படத்தினை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்து வரும் கழுவேந்தி மூர்க்கன் படப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

arul nithi
arul nithi

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த துஷாரா விஜய்யான் இந்த படத்தில் ஹீரோயினாக நடத்தி வருகிறார். தற்பொழுது இந்த பட டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அருள்நிதி, துஷாரா விஜயன் இவர்களைத் தொடர்ந்து சந்தோஷ பிரதாப், சாயா தேவி, முனீஸ் காந்த், சரத் லோகிதாஸ்வா, ராஜசிம்மன், கண்ணன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.