நடிகர் அருள்நிதி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டி ப்ளாக் திரைப்படம் திரில்லர், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக..
இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படம் சூப்பரா ஓடியது இந்த படத்தை யூடியூப் பிரபலம் எருமசாணி விஜய் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அருள்நிதி அடுத்தடுத்த பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் அதில் ஒன்றாக டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அருள்நிதி 2015 ஆம் ஆண்டு டிமாண்டி காலனி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் பேய் கலந்த திரைப்படமாக எடுத்திருந்தார் இந்த படத்தில் அருள் நிதியுடன் கைகோர்த்து ரமேஷ் திலக், அபிஷேக், ஜோசப் ஜார்ஜ், எம்.எஸ்.
பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டினர் இந்த படம் தொடக்கத்தில் இருந்து இறுதி வரையுமே மிரட்டலாக இருந்ததால் இந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் தொடங்க இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கடந்த மே 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சொல்லி இருந்தார்.
டிமான்டி காலனி 2 ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் அருள் நிதியும் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. பிரியா பவானி சங்கரும் அருள் நிதியும் இதற்கு முன்பாக களத்தில் சந்திப்போம் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.