நடிகர் அருள்நிதி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் ஆக்சன் மற்றும் திரில்லர் கதை அம்சம் உள்ள படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த படங்கள் வெற்றியை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை வேறு ஒரு கோணத்தில் பார்க்க ஆசைப்படுகின்றனர்..
என்ன செய்வது அவரை சுற்றிவரும் இயக்குனர்களும் இது போன்ற கதைகளையே எடுத்து கொண்டு வருவதால் வேறு வழி இல்லாமல் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேஜாவு, டி ப்ளாக் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் தான் டைரி.
இந்த படம் முழுக்க முழுக்க ட்விஸ்ட்டாக அமைந்துள்ளதால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து உள்ளது இந்த படம் தற்பொழுது நல்ல விமர்சனத்தை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் அருள்நிதியுடன் கைகோர்த்து கிஷோர், ஜெயப்பிரகாஷ், ஷாரா தனம், பவித்ரா மாரிமுத்து, வி ஜெ தணிகை மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் 10 க்கு 9 என்கின்ற ரேட்டிங்கை IMDP நிறுவனம் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் அருள்நிதி டைரி திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 1 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த அடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது அதேசமயம் அதிகளவு வசூலை ஈட்டவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டி பிளாக், தேஜாவு படங்கள் போல இந்த படமும் நடிகர் அருள்நிதி ஒரு வெற்றி படமாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.