தமிழ் சினிமாவை பொருத்தவரை நல்ல கதைகளம் என்பது முக்கியமான ஒன்று அப்படி நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. இவர் ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், டைரி, டீப் பிளக், தேஜாவு, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி தற்போது டிமான்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பதற வைத்த திரைப்படம் டிமான்டி காலனி. வெறும் நான்கு நபர்களை சுற்றி நடக்கக்கூடிய அன்றாட வாழ்க்கையை ஒரு திரில்லர் படமாக கொடுத்துள்ளார் வெங்கி வேணுகோபால்.
இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் சமுக வலைதளத்தில் கேள்வியாக கேட்டு வந்தார்கள் இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிக் கொண்டு வருவதாக சில தகவல்கள் வெளியானது ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியே வராமல் இருந்தது.
இந்த நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிமான்டி காலனி 2 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்றும் புகைப்படத்துடன் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிமான்டி காலனி முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் குறித்து அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் டிமான்டி காலனி 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் மேலும் முத்துக்குமார், அருண் பாண்டியன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.