மீண்டும் தொடங்கும் அருவா.. இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யாவிற்கு ஜோடியாகும் நடிகைகள் யார் தெரியுமா.?

surya
surya

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா தற்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் பிறகு சூரரைப் போற்றி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய திருப்புமுறையை கண்டார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்ற நிலையில் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பு தயாரிப்பில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியான நிலையில் தற்பொழுது அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விளக்குவதாக அறிவிப்பு வெளியானது இந்த தகவலை இயக்குனர் பாலாவும் வெளியிட்டு இருந்தார் இது ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் மத்தியில் பெரிதும் அதை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இதற்கு முன்பு ஹரி சூர்யா கூட்டணியில் உருவாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் தான் அருவா எனவே இந்த திரைப்படம் மீண்டும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா மற்றும் பூஜா ஹெக்டேக் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.