அருவா திரைப்படம் உருவாகுமா.. இல்லையா .. இயக்குனர் ஹரி சொன்ன நச்சு பதில்.!

hari-and-surya-
hari-and-surya-

இயக்குனர் ஹரி தமிழ் சினிமா உலகில் இதுவரை அதிக ஆக்சன் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 1, 2, 3, சாமி, சாமி ஸ்கொயர்,தமிழ் பல போன்ற ஆக்சன் படங்களை கொடுத்த உள்ளார்  தற்பொழுது நடிகர் அருண் விஜய் உடன் முதல் முறையாக கைகோர்த்து யானை திரைப்படத்தை ஹரி உருவாக்கியிருந்தார்

இந்த படம் ஒரு வழியாக சில தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு , ராதிகா சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தியுள்ளனர்.

படம் இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் யானை திரைப்படம் சிறப்பான வசூலை அள்ளும் என தெரிவிக்கப்படுகிறது இதனால் படகுழு சந்தோஷத்தில் இருக்கிறது இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹரியிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது

அதில் ஒன்றாக  சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க இருந்தீர்கள் ஆனால்yaanai அது அப்படியே டிராப்பானது. மீண்டும் இந்த படம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என கேட்டுள்ளனர் அதற்கு ஹரி சொன்னது. அருவா படம் கைவிடப்படவில்லை தள்ளி தான் வைக்கப்பட்டுள்ளது யானை படத்தின் கதை வேறு.. அருவா படத்தின் கதை வேறு

நடிகர் சூர்யா தற்போது மற்ற திரைப்படங்களில் நடித்து வருவதால் அருவா  படம் தள்ளிப் போய் உள்ளது வெகு விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என கூறிஉள்ளார் மேலும் சூர்யா இப்பொழுது பான் இந்திய ஸ்டாராக மாறிவிட்டார்.  அதனால் அருவா திரைப்படம் மிகப்பெரிய பேன்  திரைப்படமாக உருவாகும் எனவும் கூறியிருந்தார்.