தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய 169 ஆவது திரைப்படத்தை மிக பொறுமையாகவும் ஆண்டு ஆராயத்தக்கது வரை ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைபடத்தை இயக்கும் பொறுப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பு ஆனது கேஎஸ் ரவிக்குமார் இடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகப் பெரிய ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இதற்காக பிரம்மாண்டமான செட் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளதாக படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை எவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் அவர்கள் உத்தரவு போட்டுள்ளாராம். மேலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்டுகள் இந்த திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஆர்ட்டிஸ்டுகள் மூன்று மாதத்தில் எந்த நாள் கூப்பிட்டாலும் உடனடியாக வரவேண்டும் எந்த ஒரு காரணமும் கூறக்கூடாது என படக்குழுவினர்கள் கூறிவிட்டார்களாம்.
மேலும் இவ்வாறு அனைத்து கட்டளைகளும் ரஜினி கூறியதன் அடிப்படையில் தான் பல நாட்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினி உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா, அருள் மோகன், யோகிபாபு போன்ற பல்வேறு பிரபலங்களும் நடிக்க உள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை அம்சமுடைய திரைப்படமாக அமைந்தது மட்டுமின்றி ஜெயிலர் என்ற டைட்டிலில் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.