நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை கமீட் ஆகி நடித்து வருகிறார் அதற்குக் காரணம் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி, காதல் கலந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் அதை உணர்ந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த நீமிர், சைக்கோ, கண்ணேகலைமானே ஆகிய திரைப்படங்கள் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த இருந்ததோடு மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறினார். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் அண்மையில் அரசியல் களம் கண்ட சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றார்.
சிறு இடைவெளிவிட்டு தொடர் படங்களை நடிக்க ஆயத்தமாகி நின்றார்கள். மூன்று திரைப்படங்கள் இருக்கிறது அதற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொள்கிறது அந்த வகையில் “article 15” பட ரீமேக் தற்போது எடுக்க பட உள்ளது.
“article 15” தமிழ் ரீமேக் உரிமத்தை அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே கைபற்றினார்.இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் திரைப்பட நண்பரும் நடிகருமான அருண் காமராஜ் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகையாக கருப்பன் பட நடிகை தன்யா கமிட் ஆகியுள்ளதாக சமீபகால செய்திகள் வெளிவருகின்றன இப்படி இருக்க தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வலம் வரும் புதுமுக நடிகையான சிவானி ராஜசேகர் தற்பொழுது இந்த திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திரைப்படமே அவருக்கு முதல் திரைப்படமாக தமிழில் பார்க்கப்படுகிறது இதில் அசாதரணமான திறமையை வெளிப்படுத்துவார் ஏனென்றால் தெலுங்கில் இவர் ஒரு பிரபலமான நடிகையாக இருப்பதோடு சிறப்பாக நடிக்க கூடிய நடிகைகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.