சாலையில் நடந்த கார் விபத்து சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் தப்பிய அர்னால்டு.! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.

arnold
arnold

ரசிகர்களுக்கு தன் சொந்த மொழி படங்களையும் தாண்டி மற்ற மொழிப் படங்களையும் பிடிக்கும் உண்மையை சொல்லப்போனால் படம் சிறப்பாக இருந்துவிட்டால் ரசிகர்களுக்கு மொழி தேவையில்லை படம் சிறப்பாக இருந்தால் போதும் பார்த்து கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டு  ரசிகர்கள் தமிழுக்கு   அடுத்ததாக மிகப் பெரிய அளவில் எதிர்நோக்கிய பார்க்கும் படங்கள் ஹாலிவுட் படங்கள் தான் ஏனென்றால் புதிய தொழில்நுட்பம் வித்தியாசமான படங்கள் எச்டி தரம் என அனைத்தும் அதில் அமைவதால் ரசிகர்கள் ஹாலிவுட் படத்திற்கு என ஒரு தனி இடம் வைத்திருக்கின்றனர்.

ஏன் அண்மையில் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அந்த வகையில் ஹாலிவுட் நடிகரான அர்னால்டு ஒரு ஆணழகனாக இருந்தாலும் அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அவர் நடித்த டெர்மினேட்டர், பிரிடேட்டர்,  கமெண்ட்டோ போன்ற  படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர் உலக அளவில் பிரபலம் அடைந்த நபராக பார்க்கப்பட்டார் தமிழ்நாட்டிலும் அர்னால்டுக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்த நிலையில் அர்னால்டு காருக்கு முன்னதாகச் சென்று  இரு கார்கள் நேருக்கு நேர் மோதின. பின்னாடி வந்த கார்களும் அடுத்தடுத்து வரிசையாக தொடர்ந்து மோதின இதில் நடிகர் அர்னால்டு பெரிய கார்  சிறிய காரின் மீது ஏறியது.

நல்லவேளை அர்னால்டு சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினார். அர்னால்டு காரை விட்டு வெளியேறிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

arnold
arnold