பவுன்சர்களுடன் வீட்டிற்கு சென்ற அர்னவ்.! பயந்து பதுங்கி கதவை திறக்காமல் பதில் கூறிய திவ்யா..

arnav
arnav

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடன் இணைந்து நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் இவ்வாறு இவர்கள் திருமணம் செய்து கொள்வது மிகவும் தவறு என கூறப்படுகிறது. அதாவது அனைத்து நடிகர்களும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அந்த நாடகத்தில் நடிக்கும் கேரக்டராகவே பார்த்து காதலித்து விடுகிறார்கள்.

ஆனால் அந்த நடிகைகள் அந்த நாடகத்திற்காக மட்டுமே அப்படி நடித்து வருகின்றனர் அவர்களுக்கெனன தனி ஒரு உலகம், தனி ஒரு கேரக்டர் இருந்து வருகிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வதால் விவாகரத்து வரையும் சென்று பெரும் சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுகிறது.

அப்படி சில மாதங்களாக அர்னவ்  திவ்யா இவர்களுடைய விவாகரத்து மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது மாறி மாறி தங்களை பற்றி தவறாக பேட்டி அளித்து மொத்த மானத்தையும் வாங்கிக் கொண்டனர். அதாவது அர்னவ் திவ்யா வேறு வேறு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

திவ்யாவும் கர்ப்பமானார் இப்படிப்பட்ட நேரத்தில் அர்னவ் மேல் திவ்யாவிற்கு சந்தேகம் வர மிகப்பெரிய பிரச்சனையானது எனவே அர்னவ் தன்னை வயிற்றில் உதைத்து விட்டதாக திவ்யா போலீசில் புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அனைத்து பிரச்சினைகளும் முடிந்து அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திவ்யாவிற்கு குழந்தை பிறந்தது.

இதன் பிறகு மீண்டும் திவ்யா அர்னவ் குறித்து ஏராளமான குற்றங்களை பகிர்ந்து வர அதற்கு அர்னவ்வும் ஆடியோ வெளியிட்டு இவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் திவ்யா வீட்டிற்கு அர்னவ் பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்றுள்ளார். ஆனால் கதவை திறக்காமல் திவ்யா இங்கே எதற்கு வந்தீர்கள் உங்களுக்கும் இந்த வீட்டிற்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது எனவே போலீசை அழைத்துள்ளேன் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம்.