தமிழ் சினிமாவில் நடிகரும் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.
இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவர் அருமையாக சண்டைக்காட்சியில் நடிப்பதால் ஆக்சன் கிங் அர்ஜுன் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் என்று அனைத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் அர்ஜுன் முதல்வன் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவரின் நடிப்பு திறமையினாலும், விடாமுயற்சியாலும் தற்போது சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இயக்குனர்,நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என்று அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வெற்றிகரமாக கெத்துடன் திரை உலகில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் மலையாளத் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அந்தவகையில் இவர் திலிப் குமார்வுடன் இணைந்து டேனியல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலுடன் இணைந்து மரைக்கார் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் விருனு என்கின்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தை ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்த ஆடுபுலி ஆட்டம் திரைப்படத்தை இயக்கிய கண்ணன் என்பவர் இயக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஷா சரத்,முகேஷ்,ஹரிஷ் பேராடி உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளார்கள்.