இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் ரோலில் முதன்முதலில் நடிக்க இருந்தது.! இந்த மலையாள ஹீரோவாம்.?

irumpu-thirai-
irumpu-thirai-

கதைக்கு ஏற்றவாறு அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோவுக்கு எந்த மொழி பக்கம் சென்றாலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் மலையாள சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தவர் நடிகர் பகத் பாசில்.

மலையாள சினிமாவில் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் இதுவரை எதுவும் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்துள்ளன அதனால் தோல்வியை தழுவ நடிகர்களில் இவரும் இருக்கிறார்.

அதன் காரணமாக இவருக்கு பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அந்த வகையில் தமிழில் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் மிரட்டியிருந்தார். வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில்  உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்பகத் பாசில் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

2018 ஆம் ஆண்டு எஸ் மித்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் அர்ஜுன் நடித்த white devil கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது பகத் பாசில் தானாம்.

என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த திரைப்படத்தில் அவர் நடிக்காமல் போய்விட்டாராம். இச்செய்தி தற்போது வெளியாகியுள்ளது.