அண்மை காலமாக சினிமா உலகில் பார்ட் 2 படங்கள் எடுக்கப்படுகின்றன அந்த வகையில் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் அர்ஜுன் உடன் கைகோர்த்து சுபாஸ்ரீ, நம்பியார், சந்திரன் ராஜ், வினித், ராஜன் தேவ், அஜய், ரத்தினம், செந்தில், மனோரமா, Madhoo மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜென்டில்மேன் 2 பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் குஞ்சு மோகன் முடிவு செய்தார். சமீபத்தில் கூட அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஆனால் ஜென்டில்மேன் படத்தை சங்கர் இயக்கவில்லை அவருக்கு பதிலாக விஷ்ணுவர்தனின் இணை இயக்குனர் கோகுல கிருஷ்ணா இந்த படத்தை இயக்கப் போகிறார்.
புதுமுக நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயின்னாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடிக்கவில்லை காரணம் குஞ்சு மோகன் தற்பொழுது பணம் ரீதியாக ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார்.
அர்ஜுன் எதிர்பார்க்கும் சம்பளத்தை அவரால் கொடுக்க முடியாத ஒரு சூழல் நிலவி இருக்கிறதாம் அதனால் அர்ஜுன் இந்த படத்தில் நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளாராம் அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு இளம் ஹீரோவை கமிட் ஆகியுள்ளார் குஞ்சுமோகன். ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் இளம் ஹீரோ சேதன் சீனு நடிக்க இருக்கிறாராம்.
இவர் தமிழில் அஞ்சலிக்கு ஜோடியாக கருங்காலி படத்தில் நடித்திருந்தார் மேலும் தமிழில் பல சின்னத்திரை தொடர்களிலும் சேத்தன் சீனு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜென்டில்மேன் 2 படத்திற்கு கீராவானி இசையமைக்க இருக்கிறார் இவர் பாகுபலி படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது