தளபதி 67 படத்தில் கொடூர வில்லனாக நடிக்கும் அர்ஜுன்.. புதிய லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக உருவான வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பிரபு, ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்தனர். இதுவரை வாரிசு உலக அளவில்  200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விஜய் சந்தோஷத்தில் இருக்கிறார் அதே சந்தோஷத்துடன் தளபதி 67 படத்திலும் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக எடுத்து வருகிறார் ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும்..

அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் போன்றவர்கள்  தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது மட்டும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கியமான வில்லன் ரோலில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார் போல திடீரென நடிகர் அர்ஜுனும் தனது கெட்ட பை சேஞ்ச் செய்து உள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்திற்காக தான் அர்ஜுன் வில்லன் லுக்கில் செம்ம மாஸாக இருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகர அர்ஜுன் தளபதி 67 திரைப்படத்திற்காக புதிய கெட்டப்பில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

arjun
arjun