Arjun plan to trap Tamil : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில சீரியல்கள் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களுக்கு இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் காரில் ரவுடி மீது மோதி விட்டு அந்த கொலை பழியை தூக்கி தமிழ் மீது போடுகிறார்.
ஆனால் மேகனா அந்த பழியை ஏற்றுக் கொண்ட ஜெயிலுக்கு போய் விடுகிறார் எப்படியாவது மேகனாவே காப்பாற்ற வேண்டும் என தமிழ் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஆக்சிடென்ட் இடத்திற்கு சென்றால் ஏதாவது எவிடன்ஸ் கிடைக்கும் என கிளம்பி போகிறார்கள் அதற்கு ஹாஸ்பிடல் அடிபட்டு கிடக்கும் ரவுடியை வந்து அர்ஜுன் பார்த்து பேசி பணத்தை கொடுத்து தமிழ் தான் எடுத்தார் என பொய் சொல்ல சொல்லி விடுகிறார்.
முக்கிய இடத்தில் பாகுபலி 2 சாதனையை முறியடித்த சலார்.. தொடரும் வசூல் வேட்டை
அதேபோல் ஆக்சிடென்ட் இடத்திற்கு சென்ற தமிழுக்கு எந்த ஒரு எவிடென்ஸும் கிடைக்கவில்லை ஆனால் நமது கார் இடிக்கவில்லை என்று தெரிந்தால் உண்மையை நிரூபித்து விடலாம் என எண்ணி பேசிக் கொண்டு வரும்பொழுது அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமா அந்த தமிழ் காரை இடித்தது போல் டேமேஜ் செய்கிறார்கள். உடனே இவர்கள் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா என கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து அவர்களின் காரை பார்க்கிறார்கள் ஆனால் அவர்கள் காரில் எந்த ஒரு எவிடென்ஸும் கிடையாது.
உடனே தமிழ் அர்ஜுனிடம் சண்டை போட்டுவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இடித்த பைக்கை பார்த்து நிரூபித்து விடலாம் வருகிறார்கள் ஆனால் அங்கும் தமிழ் காரின் பெயிண்டை தடவி வைத்து விடுகிறார்கள். அப்பொழுது என்னை ஜெயிலுக்கு அனுப்புனீங்களே கண்டிப்பா உங்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் இந்த முறை நீங்க தப்பவே முடியாது என தமிழைப் பார்த்து நேருக்கு நேராக அர்ஜுன் சவால் விடுகிறார்.
அப்பா மனதை ரொம்பவும் காயப்படுத்தியது இதுதான்.. உண்மையை பகிர்ந்த சண்முக பாண்டியன்
உடனே அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமா வீட்டுக்கு வருகிறார்கள் அப்பொழுது ராகினி தமிழ் அண்ணா ஏதாவது பிரச்சனை செய்தார்களா என கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது எனக் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் இந்த முறை ஜெயிலுக்கு தமிழை அனுப்புவேன் என குடும்பமே சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அபி கேட்டு விடுகிறார். மற்றொரு பக்கம் நடந்த அனைத்தையும் வீட்டில் சொல்லி தமிழ் புலம்பி கொண்டிருக்கிறார் எப்படியாவது மேகனாவை வெளியே எடுத்தாக வேண்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.