Arjun Daughter Engagement : அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் தன்னுடைய அக்ஷனினால் பட்டையை கிளப்பி வருகிறார்.
அர்ஜுன் நடிகராக மட்டுமல்லாமல் சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம், ஏழுமலை உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் கர்ணா, கன்னடத்தில் துட்ட முட்ட ஆகிய படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் ரேசில் இருந்து விலக போகும் 4 படங்கள்.! அந்தரத்தில் தொங்கும் சிவகார்த்திகேயனின் அயலான்
இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அர்ஜுனுக்கு வில்லன் கேரக்டர் தான் நல்ல பிரபலத்தை பெற்று தருகிறது. ரசிகர்களும் இதனையே விரும்புகின்றனர் அப்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரின் நடித்திருந்தார். விஜய்யின் என்ட்ரியை விட இவருடைய என்ட்ரி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.
இவ்வாறு இந்த சூழலில் அர்ஜுனனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அதாவது அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே சினிமாவை விட்டு விலகிய ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் கோலிவுட்டில் சிறந்த நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர்கள் ஓகே சொல்ல சமீபத்தில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர்களுடைய திருமண தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.