Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆனால் தற்பொழுது வரையிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
விடாமுயற்சி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் திசையமைக்க உள்ளார். மேலும் நிரவ்ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். விடாமுயற்சி படம் குறித்து மே மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் தற்பொழுது 4 மாதங்களை கடந்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
ரசிகர்களும் வலிமை அப்டேட்டுக்கு ஏங்கியது போலவே விடாமுயற்சி அப்டேட்டுக்காகவும் எதிர்பார்த்த வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் கமிட் ஆகியுள்ளார்.
இதனை அடுத்து கைதி, விஜயின் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடரவில்லை என்பதனால் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அர்ஜுன் தாஸ் நடிக்க இருந்த இந்த கேரக்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்பொழுது விடாமுயற்சி படத்திலும் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அபுதாபியில் தொடங்க உள்ளது.