ரோலக்ஸ் ரசிகர்களிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்ட அர்ஜுன் தாஸ்.! எதற்காக தெரியுமா..?

surya-01
surya-01

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது அந்த வகையில் இவர் இயக்கிய மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த விட்டது.

இந்நிலையில் ராஜ் கமல் தயாரிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் மட்டும் சும்மாவா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி போன்ற பலர் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் முழுக்க பழிவாங்கும் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும் அதை மிக தத்ரூபமாக லோகேஷ் காட்டியுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அர்ஜுன் தாஸ் தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் அவர் கமலஹாசன் மற்றும் சூர்யா அவர்களுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டர் ஒன்றை வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் கூறியது என்னவென்றால் மச்சி ஒரு சீன் என்று லோகேஷ் அழைக்கும் போது நாங்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டோம் சரி என்று சொல்வோம் ஆனால் அந்த காட்சியில் ஒரு பக்கம் கமல் சார் மறுபக்கம் சூர்யா சார் இடையில் என்னால் என்ன செய்ய முடியும் அவர்களைப் பார்த்து ரசிக்க முடியும்.

பொதுவாக என்னுடைய வாழ்க்கையில் மானிட்டர் முன்பு இவர்களுடைய முகத்தை பார்த்து பார்த்து தான் சிறந்த அனுபவத்தை உண்டாக்கிக் கொண்டேன் அந்த வகையில் கமல் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் பார்ப்பதற்காக காத்திருந்த நாங்கள் சென்று தற்போது அவர்களுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து விட்டது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நான் விக்ரம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்ற தகவல் வெளியானவுடன் கமல் மற்றும் சூர்யா சாருடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள் என்று நீங்கள் பலர் கேட்டீர்களானால் அப்போது என்னால் அதை கூறமுடியவில்லை அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவுகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.