அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சி இனி என் ரூட் கிளியர்.. அர்ஜுனின் இரண்டாவது மகள் காதலர் இவரா.?

arjun daughter
arjun daughter

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்பொழுது அர்ஜுனனின் இரண்டாவது மகளின் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து தனது பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி கோவிலில் இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர்கள் மத்தியில் நடைபெற்ற நிலையில் இதனை தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்க பிரம்மாண்டமாக சென்னையில் வரவேற்பு விழா நடைபெற்றது.

இதனை அடுத்து அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் அழகிய ஆண் நண்பர் ஒருவருடன் இவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் அஞ்சனாவின் காதலரா? இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து அஞ்சனாவின் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.