பகவான் திரைப் படத்தின் நாயகியை வீடியோ மூலம் அறிமுகப்படுத்திய ஆரி.!

pakavan

பொதுவாக ஆரி மற்ற நடிகர்களை விடவும் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.  உதாரணமாக நெடுஞ்சாலை திரைப்படத்தில் கூட வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆடும் கூத்து, இரட்டை சுழி, மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுவது மற்றும் தைரியமாக இருப்பது போன்றவை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

aari 4
aari 4

இவ்வாறு நல்ல குணமுடையவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் பொழுது இவர் நடித்து வரும் பகவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. இதன் மூலம் இத்திரைப்படத்திற்கான மிகப்பெரிய கவனத்தையும் ரசிகர்கள் மத்தியில்  பெற்றது.

actress 6

வித்தியாசமான ஸ்டைலில் ஆரி இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று பல மாதங்களாக கேட்டு வந்தார்கள். அந்த வகையில் ஆரி சமீபத்தில் கதாநாயகியான பூஜிதா பொண்டாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பூஜிதா பொண்டாவின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் ஆரியின் காட்சிகள் எடுத்து முடிக்க இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதாகவும் கூறி உள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆரி அடுத்தடுத்த பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.