தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இரண்டு டாப் ஹீரோக்கள் என்றால் அது அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அவர்களை சந்தோஷப்படுத்த வருடத்திற்கு ஒரு படத்தை அழகாக கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் வலிமை படத்தின் வெற்றியை..
தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறதாம் இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் மறுபக்கம் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆகிறது இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளி ஆகிறது என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகரான ஜீவாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக நீங்கள் முதலில் துணிவு படத்தை பார்ப்பீர்களா அல்லது வாரிசு படத்தை பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் முதலில் எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ..
அதற்கு முதலில் போவேன் எனக் கூலாக பதில் அளித்தார். பின்பு கேள்வியை அடுத்ததாக மாற்றி கேட்டனர் அதாவது ஒரே நேரத்தில் இரண்டு டிக்கெட்டும் கிடைத்துவிட்டால் எந்த படத்திற்கு போவீர்கள் என கேட்டதற்கு அவர் பதிலளிக்கவே இல்லை மேலும் அஜித் விஜய் போன்ற நடிகர்களை பார்த்து வளர்ந்தவன் நான் என கூறி முடித்தார்.