தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சில வருடங்களுக்கு முன்பாக எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வாலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இது திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் அமைந்தது மட்டுமில்லாமல் மாபெரும் ஹிட்டு கொடுத்தது.
அந்த வகையில் வாலி திரைப்படத்தில் இடம்பெற்ற நிலவை கொண்டு வா என்ற பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக கேட்கப்பட்டது அந்த வகையில் இந்த பாடல் பற்றி காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் அவை வைரலாக ஆரம்பித்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த பாடல் பாடும் பொழுது பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டது அதனால் தான் இந்த பாடலை அவர் மெதுவாக பாடுவதாக காமெடி வீடியோ ஒன்று வெளியாகியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பறவி வந்தன.
அந்த வகையில் இந்த பாடலை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரித்தது மட்டுமில்லாமல் இந்த வீடியோவை சமீபத்தில் நடிகை சிம்ரன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த பதிவேற்றம் செய்த வீடியோவுடன் திங்கட்கிழமை காலையில் நான் எழுந்தவுடன் இந்த வீடியோவை பார்த்து தான் சுறுசுறுப்பானேன் என்று பதிவு போன்ற வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை பார்த்த நமது நடிகை சிம்ரன் அவர்கள் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று அந்த வீடியோவை கமெண்ட் செய்தது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.