தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது யசோதா திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த டீசரில் நடிகை சமந்தா மருத்துவமனைக்கு வருகிறார். அப்பொழுது சமந்தாவிடம் டாக்டர் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என வாழ்த்துக்கள் கூறுகிறார்.
பிறகு முதல் மூன்று மாதம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், சரியாக நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்றும், நன்றாக தூங்க வேண்டும், நடக்கும்பொழுது ரொம்ப கவனமாக பார்த்து நடக்க வேண்டும், வெயிட்டாக இருக்கும் பொருட்களை தூக்காமல் எளிய வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், வேலை செய்யும் பொழுதே கீழே விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும், உடனடியாக அதிர்ச்சடைய கூடாது என பலவற்றையும் சமந்தாவிற்கு மருத்துவர் அறிவுரையாக கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் டாக்டர் அறிவுரை கூறிய நிலையில் அனைத்திற்கும் எதிர்மறையாக சமந்தாவின் வாழ்க்கையில் நடைபெறுகிறது இதனால் அவருடைய கருப்பம் என்ன ஆனது அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை விளக்கும் வகையில் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டீசரின் மூலம் தெரிய வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தாவை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இவர்களை தொடர்ந்து ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் மணி சர்மா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.