நீ எனக்கு போட்டியா..? விஜய் சேதுபதியை கட்டம் கட்டும் பிரபல நடிகர்.! இனி என்னோட ஆட்டம் தான் என மாஸ் காட்டும் பிரபல நடிகர்..

vijay-sethupathi
vijay-sethupathi

2005 ஆம் ஆண்டு சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் விஜய் ஆண்டனி. இவர், தான் இசைத்த முதல் திரைப்படத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை ரசிகர்கள் மனதில் விதைத்து விட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இவ்வாறு இசையமைத்துள்ளார் அதிலும் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் திரைப்படத்திற்கு அவரே இசையமைத்து வருகிறார்.

இப்படி இசையமைப்பாலராக பல திரைப்படங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விஜய் ஆண்டனி பின்பு தான் ஒரு நடிகன் என்று நிரூபித்தார். அதாவது தமிழ் சினிமாவில் நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, கொலைகாரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஒரு வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் கால்ஷீட் கிடைக்காமல் பல இயக்குனர்கள் தினறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி வருகிறார்.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்றால் தற்பொழுது விஜய் சேதுபதி என பலரும் கூறும் வகையில் மிரட்டலாக வில்லனாக நடித்து விட்டார். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதியை பீட் செய்ய இருக்கிறார்  நடிகர் விஜய் ஆண்டனி.

இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்ய தயங்கும் ஒரு செயலை தற்பொழுது விஜய் சேதுபதி செய்துள்ளார் அதாவது தமிழில் பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தாலும் தற்போது இந்தியில் ஜவான் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒரு தொடரிலும் நடித்து வருகிறார்.

அப்படி விஜய் சேதுபதியை ஓரம் கட்டும் வகையில் பல திரைப்படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி என பல திரைப்படங்களில் தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் இப்படி கிட்டத்தட்ட எட்டு திரைப்படங்களில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வருகிறாராம் அந்த வகையில் விரைவில் விஜய் சேதுபதியை ஓரங்கட்டி விடுவார் விஜய் ஆண்டனி என சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.