விஜயை வைத்து படம் பண்ணுவீங்களா… பேட்டியில் ஹச்.வினோத் கூறிய சுவாரஸ்ய தகவல்.

vijay-and-vinoth
vijay-and-vinoth

சினிமாவுலகில் எப்படி புதுமுக நடிகர் நடிகைகள் உருவாகின்றன அதேபோல இயக்குனர்களும் அதிகமாக வலம் வருகின்றனர் தமிழ் சினிமாவை  அதிகம் ஆட்சி செய்வது இளம் தலைமுறை இயக்குனர்கள் தான்.

இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து ஹீரோ படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகின்றனர் அந்த லிஸ்டில் தற்போது சேர்ந்து உள்ளவர்தான் இயக்குனர் ஹச். வினோத். இவர் இதுவரை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை அதைத் தொடர்ந்து இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜீத் குமாருடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தையும் எடுத்து முடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை அஜித்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதனால் இயக்குனர் ஹச்.வினோத்தின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

வலிமை படம் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் வினோத் அப்படி பேட்டி ஒன்றில் விஜய்யுடன் இணைவது குறித்து அவர் பேசியுள்ளார் அவர் சொன்னது ஏற்கனவே நான் விஜய் சாரை மூன்று தடவை சந்தித்து உள்ளேன் அதில் இரண்டு முறை கதை சொல்லி விட்டேன் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் நன்றாக கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

ஹச். வினோத்  நிச்சயம் ஒரு நாள்   விஜய் உடன் இணைந்து பணியாற்றத் தான் போகிறார். அந்த அளவிற்கு திறமையும் ஒரு படத்தை எப்படி வெற்றிகரமாக எடுக்க வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இருப்பவர்.

இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே மெகா ஹிட் என்பதால் இவர் அடுத்தடுத்த எடுக்கப்படும் படங்கள் கூட ஹிட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் விஜய், அஜித் யாருடன் இவர் சேர்ந்து படம் பண்ணினாலும் அந்த படம் மெகா ஹிட் ஆகும்.