நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து நடித்து உள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார் சிம்புவும், கௌதம் வாசுதேவ் மேனனும் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தான் அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என கூறப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு படம் தற்போது சூப்பராக உருவாகி உள்ளது இந்த படத்தில் நடிகர் சிம்பு ரொம்ப மெனக்கெட்டு நடித்துள்ளார் 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக நடித்துள்ளார் மேலும் ஒவ்வொரு காட்சிகள் வரும் போது அவரது உடல் அமைப்பு மாறிக் கொண்டே போகும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் சூப்பராக இசையமைத்துள்ளார் படம் நாளை கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், kayadu lohar, neeraj madhav, siddhi idnani.
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர். இந்த படம் நாளை காலை 5 மணிக்கு முதல் ஷோ வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும் பொழுது வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணிக் காட்சி பார்க்க போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவு நன்றாக தூங்கி விட்டு வரவும் ஏனென்றால் கதை மற்றும் கதாபாத்திரத்தில் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கப்படும் என கூறினார்.. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.