ராப் பாடகியான ஐக்கி பெர்ரி உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் தற்போது இவர் வெளிநாட்டில் தான் வாழ்ந்து வருகிறார்.
பிக் பாஸ் விளையாட தமிழகம் திரும்பி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பயணித்தாலும் ஒருகட்டத்தில் மக்கள் மத்தியில் சுவாரசியம் இல்லாத நபராக கருதப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் இவர் பல்வேறு யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களிலும் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
இதனால் தற்போது மக்கள் மத்தியில் இன்றும் பிரபலம் அடைந்த நபராக ஐக்கி பெர்ரி உருவெடுத்துள்ளார். நாம் இதுவரை ஒரு பாடகராக தான் பார்த்து வருகிறோம் ஆனால் உண்மையில் ஒரு பல் மருத்துவர், டான்ஸர் என பல்வேறு திறமைகளை தன்வசம் வைத்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்களை சந்தித்து அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐக்கி பெர்ரி திடீரென மாநாடு திரைப்படத்தை இயக்கி வெற்றி கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியாகி உள்ளனர்.
பாடகியாகவும், மருத்துவராகவும், டான்ஸராக இருந்த ஐக்கி பெர்ரிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்கனவே இருந்ததாம். இப்பொழுது வெங்கட் பிரபுவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் நீங்கள் வெங்கட் பிரபு நடித்த படத்தில் நடிக்கிறீர்களா அல்லது பாடகராக பணியாற்ற இருக்கிறார்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர் ஆனால் அதற்கும் பதிலளிக்காமல் இருந்து வருகிறார். இதோ ஐக்கி பெர்ரி, வெங்கட் பிரபு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.