நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார்.
படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால் துணிவு படம் வெற்றி பெறும் என பலரும் கூறி வருகின்றனர் இந்த படத்தில் அஜித் செம்ம ஸ்மார்ட்டாக நடித்துள்ளாராம் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், சிபி போன்றவர்களும் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருக்கிறது இருப்பினும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தப் படக்குழு அடுத்த அப்டேட்களை வெளியிட இருக்கிறது அந்த வகையில் அடுத்ததாக சில்லா சில்லா பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் செய்யாறு பாலு தொடர்ந்து நடிகர் அஜித் குறித்தும் துணிவு திரைப்படம் குறித்தும் பல்வேறு தகவல்களை கொடுத்து வருகிறார் அதில் ஒன்றாக சமீபத்திய பேட்டி ஒன்றில் fdfs யாருக்கு அதிகம் கிடைக்கும் என நிருபர் கேள்வி கேட்க.. அதற்கு செய்யாறு பாலு நிச்சயம் அஜித்தின் துணிவுக்கு தான் கிடைக்கும்..
ஏனென்றால் அஜித்தின் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது அதனால் துணிவு படத்திற்கு தான் அதிகம் கிடைக்கும் என அவரது கருத்தை கூறி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.