தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா.? நிருபரின் கேள்விக்கு நடிகை திரிஷா கொடுத்த பதிலை பாருங்கள்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா இவர் அஜித், விஜய், விக்ரம், கமல்,சூர்யா போன்ற டாப் நடிகளின் படங்களில் நடித்தவர் மேலும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர் தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் திரிஷா இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது இந்த படத்தில் திரிஷாவுடன் கைகோர்த்து ஐஸ்வர்யா ராய்,  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,  விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திரிஷா மேலும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது ஐஸ்வர்யா ராயும், நானும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய கூடாது என இயக்குனர் மணிரத்னம் சொன்னார்.

அதற்கான காரணம் இந்த படத்தில் நாங்கள் இரண்டு பேரும் எதிரிகள் அதனால் இப்பொழுது நல்ல நண்பர்களாக பேசிக் கொண்டால் அந்த காட்சி சிறப்பாக வராது என்ற காரணத்தினால் எங்களை பேசக்கூடாது என்று கூறினார். ன  மேலும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

அப்பொழுது தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் நாம் இருக்கிறோம் எனவே இந்த படத்தைப் பற்றி பேசினால் ரொம்ப நல்லது என கூறியுள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.