யூடியூபில் எப்போதும் டிரெண்டாகவே இருக்கக்கூடிய சேனல்களில் ஒன்றுதான் மெட்ராஸ் சென்ட்ரல். இந்த சேனலில் பல வீடியோக்களை வெளியிட்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். பெரிய அளவிற்கு மக்களை சேர்த்து வைத்த இவர்களை மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் வெளியேற்றியது.
அதன் பிறகு இருவரும் சேர்ந்து சொந்தமாக சோதனைகள் என்ற ஒரு youtube சேனலை ஓப்பன் செய்தனர். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை கேலி செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர்களுக்கு கொலை மிரட்டல் கூட வந்ததாக கூறியிருந்தனர். அதன் பிறகு தற்போது பலவிதனமான பிரச்சனைகளை ட்ரோல் செய்து விடியோவாக வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிஜெக்ட் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது வரையிலும் சோதனைகள் என்ற youtube சேனலில் பிரபலமாக பேசப்பட்டு வரும் சுதாகர் மற்றும் கோபி இவர்கள் இருவரையும் தெரியாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளனர்.
அதன் பிறகு கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைபடம் கூட இணையத்தில் செம்ம விரலானது.
மேலும் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும் இணைந்து சமீபகாலங்களாக சமூக நலன் கருதி ட்ரோல் செய்யும் வீடியோக்களை தங்களுடைய பாணியில் கொடுத்து வந்த இவர்கள் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் இன்று இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிகி வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
‘Parithabangal’ Gopi & Sudhakar’s new film starts today pic.twitter.com/00ynMtWu3t
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 23, 2023