Thalapathy 68 : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகயுள்ள “தளபதி 68” படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அஜித்தின் பிரதான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே பூஜை தொடங்கப்பட இருக்கிறது. மறுபக்கம் படத்திற்கான வேலைகள் அதிரடியாக போய்க்கொண்டிருக்கின்றன. படத்தில் விஜய் உடன் இணைந்து பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி 80 காலகட்டங்களில் புகழின் உச்சத்தில் இருந்த மைக் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார். அதனை தொடர்ந்து தளபதி 68 படத்தில் அவர் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
மேலும் திரிஷா, பிரியங்கா அருள் மோகன், அரவிந்த்சாமி மற்றும் வெங்கட் பிரபுவும் இந்த படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கிளாமர் நடிகை ஒருவரும் தளபதி 68 படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது அவர் வேறு யாரும் அல்ல..
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி தான் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் தமிழையும் தாண்டி தெலுங்கிலும் இந்த படம் சக்க போடு போடு என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.