விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகமாகி வரும் நிலையில் தற்போது நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஏராளமான போட்டியாளர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.
மேலும் கடந்த ஐந்து சீசன்களும் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் சமீபத்தில் தொடங்கியுள்ளது மேலும் அனைத்து சீசன்களிலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவது வழக்கம். உதாரணமாக கடைசி ஐந்தாவது சீசனில் அமீர்- பாவணி மிகவும் பிரபலமானார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆறாவது சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ்- ஓவியா, இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின்- லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ்- ஷிவானி நாராயணன், ஐந்தாவது சீசனில் அமீர் பாவனி போன்ற காதல் ஜோடிகள் பிரபலம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது அமீர் பாவணியை தவிர மீதி நான்கு காதல் ஜோடிகளும் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்தவுடன் பிரிந்து விட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசனில் காதல் ஜோடி யாராக இருக்கும் என நெட்டிசன்கள் ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் வி.ஜே மகேஸ்வரி மற்றும் ராம் ராமசாமிக்கு இடையே காதல் பற்றிக் கொண்டதாக கூறி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து நான் மிச்சர் திங்க வரவில்லை எப்பொழுதும் பரபரப்பாக இருப்பேன் என்று கூறிவந்த விஜே மகேஸ்வரி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போடுவது போல் பேசி வரும் விஜே மகேஸ்வரி ராம் ராமசாமியிடம் மட்டும் ஸ்வீட்டாக பேசி வருவது ரசிகர்களுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இதுகுறித்து சமீபத்தில் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எல்லாரிடமும் இப்படி ஸ்வீட்டாக பேசுகிறீர்களா என மகேஸ்வரி கேட்க அதற்கு உங்களிடம் மட்டும் தான் நான் ஸ்விட்டாக பேசுவேன் அதுவும் சும்மா ஒரு ஜாலிக்கு என்று அவர் கூறுகிறார் இவ்வாறு ராம் ராமசாமி மற்றும் விஜே மகேஸ்வரி காதல் ஜோடிகளாக மாறுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.