சூர்யா, ஜோதிகாவின் குழந்தைகளா இது.? இவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டார்களே.. புகைப்படத்தை ஷாக்கான ரசிகர்கள்.

surya and jothika

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா சமீபகாலமாக ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் போன்ற சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் ஒரு சிறந்த நடிகராக காணப்படுகிறார்.

மேலும் சூர்யா அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார் தற்போது இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் மற்றும் வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் ஜோதிகா பல முக்கிய கதை களம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் சிறப்பாக ஜொலித்து சிறந்த தம்பதியராக வாழ்ந்து வருகின்ற சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் இவர்கள் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளன.

surya and jothika
surya and jothika

இந்த நிலையில் சூர்யா,ஜோதிகா இவர்களது மகன் மகள் மற்றும்  ஜோதிகாவின் தங்கை நக்மா போன்றவர்கள் குடும்பமாக ஒரு விழாவில் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்த வீடியோவை பார்த்த சூர்யா ரசிகர்கள் பலரும் தியா மற்றும் தேவ் நன்றாக வளர்ந்து விட்டனர் என கமெண்ட் களில்  தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.