சமீப காலமாக சினிமா திரை உலகில் புதுமுக இயக்குனர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி டாப் நடிகர்கள் படங்களை ஈஸியாக கைப்பற்றி விடுகின்றனர் அந்த வகையில் கோலமாவு கோகிலா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நெல்சன் திலீப் குமார்.
தற்போது விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இதற்கு முன்பாக அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “டாக்டர்” என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படமும் வெகுவிரைவிலேயே வெளியாக உள்ளது இது ஒருபுறம் இருக்க நெல்சன் திலீப்குமார் விஜயுடன் கைகோர்த்து மிகத்தீவிரமாக “பீஸ்ட்” திரைப்படத்தை செதுக்கி வருகிறார்.
இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு தற்போது ரஷ்யா சென்று உள்ளது. அங்கு சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மூன்று பேர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் நடித்து வருகிறார். மற்றவர்கள் குறித்து வெகு விரைவிலேயே தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
அந்த இரண்டு நபர் யார் யார் என்பது பற்றி தகவல் வரும் என கூறப்படுகிறது ஆனால் இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.