தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா, குஷ்பூ, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என படத்தில் நடித்து வரும் நடிகர்கள் தொடங்கி தயாரிப்பாளர் வரை சொல்லி வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படகுழு கூறி உள்ளது. ஆனால் தற்பொழுது நடக்கின்ற நிலவரத்தை பார்த்தால் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனால் வாரிசு திரைப்படம் பொங்கலிலிருந்து பின்வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இது இப்படி இருக்க மறுபக்கம் தளபதி 67 படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படம் என ஏற்கனவே லோகேஷ் சொல்லி உள்ளார் அதனால் தற்பொழுது வெளிவருகின்ற தகவல்களும் அது சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது அதாவது இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்க இருக்கின்றனராம்.அதில் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுதாம்.
இன்னும் மூன்று வில்லன்கள் இடைப்பட்ட வில்லன்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது மொத்தத்தில் தளபதி 67 மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது மேலும் இந்த படத்தில் சமந்தா தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.