ஹாலிவுட்டில் எப்படி ஒரே படத்தில் பல டாப் ஹீரோக்கள் நடிப்பார்களோ அதே போல லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல நட்சத்திர நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து வருகிறார் அதே சமயம் அந்த படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.
அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திலும் டாப் நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர் குறிப்பாக விஜய்க்கு வில்லனாக ஆறு பேர் நடிக்க இருக்கின்றனர் அது குறித்து தான் நாம் தற்பொழுது விலாவாரியாகவும் பார்க்க இருக்கிறோம்.
தளபதி 67 படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது அதன் புகைப்படத்தை கூட வெளியிடாமல் சைலண்டாக பாதுகாத்து வருகிறது மேலும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது விறுவிறுப்பாக தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறதாம் ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்
என்பதை கூட சொல்லாமல் இருக்கிறது இருப்பினும் சில தகவல்கள் கசிந்த வண்ணமே இருகின்றன அதன்படி தளபதி 67 திரைப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள்.. ஏற்கனவே ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது அவரை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன், சஞ்சய்தத் போன்றவர்கள் மெயின் வில்லனாக நடிக்கின்றனராம்.
மிஸ்கின், கன்னட பட நடிகர் ரக்சித் ஷெட்டி மற்றும் பழைய வில்லன் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது ஆக மொத்தத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யை எதிர்த்து இந்த ஆறு வில்லன்கள் தான் சண்டை போட போகிறார்கள் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இருந்தாலும் பட குழு சைடுல இருந்து இன்னும் கன்பார்ம் பண்ணாமல் இருக்கிறது.