தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் பல ஊர்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தென் இந்திய சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய சொந்த ஊர்கள் எது என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது அப்படி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் சொந்த ஊர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ரஜினி:- தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளாக நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படமும் ஓடவில்லை இதனை தொடர்ந்து தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படம் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இவர் பெங்களூரை சேர்ந்தவர்.
கமல்:- நடிகர் கமல் அவர்கள் தனது சிறு வயதிலிருந்து சினிமாவில் நடித்து ஜொலித்து வருகிறார். அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள கமல் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் தற்போது கமல் அவர்கள் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் பரமக்குடி.
அஜித்:- ரஜினி, கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணை இருக்கிறார் நடிகர் அஜித். மேலும் இவருடைய சொந்த ஊர் ஹைதராபாத்.
விஜய்:- இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளிவர காத்திருக்கிறது. மேலும் நடிகர் விஜய் அவர்களின் சொந்த ஊர் பரமக்குடி.
சூர்யா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் தற்போது சூர்யா அவர்கள் நடித்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர்.
சிவகார்த்திகேயன்:- குறுகி ஆண்டில் விரல்களை விட்டு எண்ணக்கூடிய அளவில் திரைப்படங்களில் நடித்து முன்னரி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு உள்ளாகினார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவருடைய சொந்த ஊர் சிங்கம்புணரி.
விக்ரம்:- நடிகர் சியான் விக்ரம் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிக்கப்பட்டாலத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்தது ஆனால் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் நடிகர் விக்ரம் அவர்கள் பரமக்குடியை சேர்ந்தவர்.
விஜய் சேதுபதி:- தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை பலரும் மக்கள் செல்வன் என அன்போடு அழைத்து வருகிறார்கள் இவருடைய சொந்த ஊர் ராஜபாளையம்.
தனுஷ்:- தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் வாத்தி திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து இவருடைய சொந்த ஊர் தேனி.
சிம்பு:- ரசிகர்களால் எஸ்டிஆர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர்.