அருண் விஜய் மடியில் தாமரை போல் மலர்ந்து இருக்கும் பிரபல நடிகை.! வைரலாகும் சினம் போஸ்டர்

arun-vijay-01
arun-vijay-01

சினிமாவில் குறைவான வெற்றியையும் அதிக தோல்வியையும் சந்தித்தவர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகர் அருண்விஜய்.  இவரின் விடா முயற்சியினால் தற்போது தான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் சினம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய் தனது விடாமுயற்சியினால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் அருண்விஜய் சினம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை  ஜி என் ஆர் குமரவேல்ன் இயக்க உள்ளார். இப்படத்தில் அருள்விஜய்க்கு ஜோடியாக பலக் லால்வனி நடித்து வருகிறார்.

arunvijay-sinam-poster
arunvijay-sinam-poster

அந்த வகையில் போலீஸ் கெட்டப்பில் அருண் விஜய்யின் மடியில் கதாநாயகி பலக் லால்வனி உட்கார்ந்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.