சினிமாவில் இருப்பதால் பலவற்றையும் இழந்து விட்டேன் என கண்கலங்கி அழுத அர்ச்சனாவின் மகள் சாரா.!

sara
sara

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் விஜே அர்ச்சனா. தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொகுப்பாளர்களில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடைய பேச்சினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பொதுவாக இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடர்ந்து ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஜீ தமிழுக்கு மாறி உள்ளார். அதாவது இவர் தன்னுடைய மகள் சாராவுடன் இணைந்து மீண்டும் சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா தன்னுடைய மகள் சின்ன வயதில் இருக்கும்பொழுது அவரை தொகுப்பாளராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திவிட்டார் மேலும் சாரா தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் அர்ச்சனா தன்னுடைய மகள் சாராவை வைத்து பேட்டி எடுக்கும் பொழுது சில மனவருத்தமான தகவலை பகிர்ந்து உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது அதாவது சாரா படித்துக்கொண்டிருக்கும் பொழுதே திரைத்துறையில் பிரபலமாக இருந்து வருவதால் அவருக்கு நண்பர்கள் கிடையாதாம் மேலும் அவர் கூறியதாவது வாழ்க்கையில் ஒருவரை நல்வழிப்படுத்துவது சுகத்துகங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களுடன் தான் ஆனால் அந்த பாக்கியம் சாராவுக்கு இல்லாமல் போனது இதுதான் எனக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்கலங்கி அர்ச்சனா பேசினார்.

zaaravineet
zaaravineet

அதற்கு எனக்கு எல்லாமே என் அம்மா தான் என் அம்மா தான் என்னுடைய சிறந்த நண்பன் நான் வருத்தத்தில் இருக்கும் பொழுது என்னுடைய அம்மாவின் தோலில் சாய்ந்தால் என்னுடைய அம்மாவையே நண்பனாக நினைப்பதாக சாரா பேசி உள்ளார் மேலும் அர்ச்சனா கண்கலங்கினார் சோசியல் மீடியாவில் சில சமயம் சாரா வயதுக்கு மீறி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை ரசிகர்கள் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.