சீரியலில் வில்லி நிஜத்தில் இப்படித்தான்.. கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட அர்ச்சனா..

archana

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய தொடரில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக சித்து மற்றும் ஹீரோயினாக ஆல்யா நடித்து வந்தனர்.

ஆனால் ஆல்யா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலக தற்போது ரியா என்ற பிரபலம் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் அர்ச்சனா. வில்லியாக இருந்தாலும் ராஜா ராணி சீரியலில் இவரது காமெடி மற்றும் லூட்டி பலரையும் சிரிக்க வைத்தது அதனால் அர்ச்சனாவிற்கு அதிக ரசிகர்களும் உருவாக தொடங்கினர்.

ஆனால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனாவும் இந்த சீரியலை விட்டு விலகினர் அர்ச்சனா ரசிகர்கள் ஏன் சீரியலில் இருந்து அர்ச்சனா விலகினார் என்ற காரணம் தெரியாமல் இருந்தனர் வேறு ஏதாவது பெரிய வாய்ப்பு கிடைத்திருக்குமோ என்றெல்லாம் யோசித்தனர்.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி அர்ச்சனாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற நடிகைகள் போல இவரும் பட வாய்ப்பை கைப்பற்ற கிளாமரில் இறங்கியுள்ளார். அர்ச்சனா பெரும்பாலும் சோசியல் மீடியாவில் ஹோம்லி லுக்கில் தான் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் தற்போது கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர் ராஜா ராணி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த அர்ச்சனாவா இப்படி மாறிவிட்டார் என கமெண்ட் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்..

archana
archana
archana