கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பல படங்களில் மிஸ் செய்த அரவிந்த்சாமி – அவரே கூறிய சூப்பர் தகவல்.

aravindsamy
aravindsamy

தமிழ் சினிமாவில் ஆணழகன் என்றால் நம் நினைவிற்கு உடனே வருபவர் நடிகர் அரவிந்த் சாமி தான். சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்களை கவர்ந்தாலும் ஒருகட்டத்தில் சினிமாவில் காணாமல் போனார்.

பல வருடங்கள் கழித்து ஜெயம் ரவி நடிப்பில் அவரது அண்ணன் இயக்கத்தில் உருவான தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதன்பிறகு அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்தது அந்தவகையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், போகன் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

மேலும் தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தற்பொழுது கூட இவர் கையில் பல்வேறு திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார்.  இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அரவிந்த் சாமிஅண்மையில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்தார் அதன் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வந்த நிலையில் அதை பார்த்த ரசிகர் ஒருவர் அரவிந்த்சாமியிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டார்.

அதில் ஒன்றாக நீங்கள் ரஜினியுடன் நடித்து விட்டீர்கள் கமலுடன் நடித்து உள்ளீர்களா என கேட்டார் அதற்கு அரவிந்த்சாமி பதில் கூறியது.  நான் பொது நிகழ்ச்சிகளில் கமலை நான் அதிக தடவை சந்தித்து உள்ளேன் ஆனால் அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பை மட்டும் இழந்து இருக்கிறேன். அன்பே சிவம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன்.

ஆனால் அந்த கதாபாத்திரம் என்னால் நடிக்க முடியாமல் போனது அதுபோல தெனாலிராமன் திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்த டாக்டர் கதாபாத்திரத்தில் நான் தான் முதலில் நடிக்க இருந்தேன் அதையும் சில காரணங்களால் நான் மிஸ் செய்து விட்டேன் என கூறி வருத்தப்பட்டார்.