நடிகர் ஆர்யாவின் கூட்டணியில் மாஸாக களமிறங்கும் அரவிந்த்சாமி..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டு தான்..!

arya-01

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தளபதி திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. இவ்வாறு இந்த திரைப்படத்தில் அவருடைய சிறந்த நடிப்பை பார்த்த மணிரத்னம் அவரை ரோஜா திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்த அரவிந்த்சாமி ஏகப்பட்ட பெண் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் இவரை சாக்லேட் பாய் என கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு, போன்ற காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

அதன்பிறகு வெகு காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நமது அரவிந்த்சாமி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற திரைப்படத்தின் மூலம்   தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நடித்த தனி ஒருவன் என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் இவரை தனியாக எடுத்துக்காட்டியது.

இவ்வாறு தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அரவிந்த்சாமி தன்னுடைய கைவசம் சதுரங்க வேட்டை, வணங்காமுடி, நரகாசுரன், கள்ளபார்ட் ஆகிய திரைப்படங்கள் உள்ளன மேலும் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

aarya-1
aarya-1

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஒட்டு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது மலையாளம் மட்டுமின்றி  தமிழிலும் உருவாக உள்ளது இத்திரைப்படத்திற்கு தமிழில் ரெண்டகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் ஆர்யா தான் தயாரிக்க உள்ளாராம். இவ்வாறு ஆர்யா மற்றும் சந்தோஷ்சிவன் ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ள ஆகஸ்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள்.