வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு எதிரிகளை பந்தாடும் அரவிந்த்சாமி – வெளிவந்த “கள்ளபார்ட்” படத்தின் டீசர்.!

kalla-part
kalla-part

தமிழ் சினிமா உலகில் ஆணழகன் என அழைக்கப்படுபவர் அரவிந்த்சாமி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் போகப்போக சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அட்ரஸ் தெரியாமல் போனார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் இந்த பாத்திரத்தில் நடித்து  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அதைத்தொடர்ந்து சினிமா உலகில் இவருக்கு வாய்ப்புகள் ஹீரோ – வில்லன் கதாபாத்திரங்கள் மாறி மாறி நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து  றப்பாக நடித்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார் அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் ரிலீசாகாமல் இழுத்துக்கொண்டே போனது அந்த லிஸ்டில் இருந்த படம் கள்ளபார்ட்.

இந்த படத்தை ராஜபாண்டி இயக்குகிறார் ஒருவழியாக தடைகளை தகர்த்தெறிந்து படம் ரிலீசாக உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் ட்ரைலர்  தற்போது வெளியாகியுள்ளது இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி   ஊனமுற்றவராக இருப்பதால் வீல் சேரில் உட்கார்ந்து கொண்டே படதத்தில் முழுவதும் நடித்துள்ளார்.

படம் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருக்கும் என தெரியவருகிறது.இந்த படத்தில் அரவிந்த்சாமி உடன் கைகோர்த்து ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர். தற்போது இந்த டிரைலர் இணையதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அரவிந்த்சாமி மிரட்டி உள்ள கள்ளபார்ட் படத்தின் டிரைலர்.