சினிமாவில் பல வருடங்கள் கழித்து மீண்டும் படங்களில் ஹீரோக்களாக நடித்து வருபவர்கள் தான் அரவிந்சாமி மற்றும் பிரபுதேவா இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ் சினிமா பல்வேறுவிதமான பட வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்து வருகிறது.
ரீ-என்ட்ரி கொடுத்தார் அரவிந்சாமி முதலில் வில்லனாகத்தான் அறிமுகமானார் இவரது நடிப்பு வேற லெவல் இருந்த காரணமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது ஹீரோவாக நடிக்க பல்வேறு வாய்ப்புகளை கொடுத்து வருவதால் தற்போது வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபுதேவா இயக்குனராக இருந்து மீண்டும் தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து தற்போது ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு, மங்காத்தா உள்ளிட்ட படங்களை எடுத்து வெற்றி கண்ட வெங்கட்பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தையும் முடித்துள்ளார்.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் அரவிந்சாமியும் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 24 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் எகிறி உள்ளது மேலும் இந்த படத்திற்கு வில்லனாக கன்னட டாப் நடிகரான கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரவிந்த் சாமியும் பிரபுதேவாவும் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.